ஹாக்கி

சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி + "||" + Sultan Cup hockey: Indian team losing in the final

சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி

சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
சுல்தான் கோப்பை ஆக்கியின், இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
ஜோஹர் பாரு,

9-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதல் பாதியில் யாரும் கோல் அடிக்காத நிலையில் 49-வது நிமிடத்தில் குர்சாஹிப்ஜித் கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை ஏற்படுத்தி தந்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 50-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் ருஷ்மிரே பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் திருப்பினார்.


இதையடுத்து வெற்றிக்குரிய கோலை அடிக்க இரு அணியினர் வரிந்து கட்டி நின்றனர். கடைசி நிமிடத்தில் ஸ்டூவர்ட் ருஷ்மிரே மீண்டும் ஒரு கோல் அடித்தார். முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து 3-வது முறையாக இந்த கோப்பையை கைப்பற்றியது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி
ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு சானியா ஜோடி முன்னேறியது.
2. ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி.- ஸ்டேட் வங்கி
‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி.- ஸ்டேட் வங்கி அணிகள் மோத உள்ளன.
3. பள்ளி கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேற்றம்
பள்ளி கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியது.
4. டோனியால் தவறிப்போன சதம்! ரகசியம் வெளியிட்ட கவுதம் கம்பீர்
உலக கோப்பை இறுதிப்போட்டியில் தன்னால் சதம் அடிக்க முடியாததற்கு டோனியும் ஒரு காரணம் என்று கவுதம் கம்பீர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
5. சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா
சுல்தான் கோப்பை ஆக்கியின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றது.