ஹாக்கி

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி + "||" + Indian women's hockey team qualifies for 2020 Tokyo Olympic Games

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி
அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.
புவனேசுவரம்,

2020 ஆம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறும் ஹாக்கி போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்க அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இன்று நடந்த இரண்டாவது சுற்றில் 6-5 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு அடுத்த வருடம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஹாக்கி போட்டிக்கான ஆண்கள் பிரிவில் இந்திய அணி ரஷ்யாவுடன் தற்போது விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி ரஷ்யாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி ‘டிரா’ செய்தாலே சிக்கலின்றி ஒலிம்பிக் வாய்ப்பை பெற்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே அடுத்த இலக்கு’ - பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேட்டி
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்தார்.