ஹாக்கி

43 அணிகள் பங்கேற்கும் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் - சென்னையில் நாளை தொடக்கம் + "||" + 43 teams participating in a digital division of the league - Start tomorrow in Chennai

43 அணிகள் பங்கேற்கும் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் - சென்னையில் நாளை தொடக்கம்

43 அணிகள் பங்கேற்கும் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் - சென்னையில் நாளை தொடக்கம்
43 அணிகள் பங்கேற்கும் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டிகள் சென்னையில் நாளை தொடங்க உள்ளது.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் ஏர் இந்தியா, தமிழ்நாடு மின்சார வாரியம், ஸ்டேட் வங்கி, தபால் துறை, ஆயுதப்படை போலீஸ், சாய் உள்பட 43 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். தொடக்க நாளான நாளை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம்-ஆர்.வி. அகாடமி அணிகள் மோதுகின்றன. இந்த தகவலை சென்னை ஆக்கி சங்க செயலாளர் எம்.எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடவாசல் - வலங்கைமானில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் காமராஜ் பங்கேற்பு
குடவாசல் மற்றும் வலங்கைமானில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.
2. திருச்சியில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி 700 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
திருச்சியில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் 700 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
3. சதயவிழாவையொட்டி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு கலெக்டர்-நீதிபதி பங்கேற்பு
சதயவிழாவையொட்டி ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் அண்ணாதுரை, நீதிபதி சிவஞானம் பங்கேற்றனர்.
4. சிவம்பட்டி கிராமத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் பங்கேற்பு
சிவம்பட்டி கிராமத்தில் நடந்த ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டார்.
5. ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம்
ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (சனிக் கிழமை) தாய்லாந்து செல்கிறார். தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூலை அவர் வெளியிடுகிறார்.