ஹாக்கி

ஏ டிவிசன் ஆக்கி லீக்: செயின்ட் பால்ஸ் அணி வெற்றி + "||" + A. Division Hockey League: St. Paul's team wins

ஏ டிவிசன் ஆக்கி லீக்: செயின்ட் பால்ஸ் அணி வெற்றி

ஏ டிவிசன் ஆக்கி லீக்: செயின்ட் பால்ஸ் அணி வெற்றி
ஏ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், செயின்ட் பால்ஸ் அணி வெற்றிபெற்றது.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவர் சேகர், பொதுச்செயலாளர் ரேணுகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் செயின்ட் பால்ஸ் கிளப் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வேளச்சேரி கிளப் அணியை தோற்கடித்தது. ஆர்.வி.அகாடமி-தமிழ்நாடு மின்சார வாரியம் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.