ஹாக்கி

ஏ டிவிசன் ஆக்கி லீக்: ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி + "||" + A. Division Hockey League: Armed Forces Police Team Win

ஏ டிவிசன் ஆக்கி லீக்: ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி

ஏ டிவிசன் ஆக்கி லீக்: ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி
ஏ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றிபெற்றது.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோட்டூர் புல்மூன் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஆயுதப்படை போலீஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அடையார் யுனைடெட் அணியை வென்றது. இன்னொரு ஆட்டத்தில் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் அணி (எம்.சி.சி) 5-0 என்ற கோல் கணக்கில் எவர் மெர்ரி கிளப் அணியை தோற்கடித்தது.