‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக்: திருமால் அகாடமி வெற்றி


‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக்: திருமால் அகாடமி வெற்றி
x
தினத்தந்தி 11 Nov 2019 11:47 PM GMT (Updated: 11 Nov 2019 11:47 PM GMT)

‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், திருமால் அகாடமி அணி வெற்றிபெற்றது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் திருமால் அகாடமி அணி 4-1 என்ற கோல் கணக்கில் சிவலிங்கம் நினைவு கிளப் அணியை தோற்கடித்தது. திருமால் அகாடமி அணியில் ஸ்ரீராம் 3 கோல்கள் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் அண்ணா நினைவு அணி 2-1 என்ற கோல் கணக்கில் அடையார் யங்ஸ்டர் அணியை வீழ்த்தியது.


Next Story