ஹாக்கி

ஏ டிவிசன் ஆக்கி லீக்: ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி + "||" + A. Division Hockey League: Armed Forces Police Team Win

ஏ டிவிசன் ஆக்கி லீக்: ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி

ஏ டிவிசன் ஆக்கி லீக்: ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றி
ஏ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், ஆயுதப்படை போலீஸ் அணி வெற்றிபெற்றது.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஆயுதப்படை போலீஸ் அணி 7-0 என்ற கோல் கணக்கில் அண்ணா நினைவு அணியை தோற்கடித்தது. விஜய் 3 கோல்கள் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் யுனிவர்செல் ஆக்கி கிளப் 3-1 என்ற கோல் கணக்கில் லயோலா கல்லூரி அணியை சாய்த்தது. இதே போல் ஸ்போர்ட்டிங் பிரதர்சுக்கு எதிரான ஆட்டத்தில் மெட்ராஸ் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.