ஹாக்கி

ஜூனியர் பெண்கள் ஆக்கி: இந்திய அணியிடம் நியூசிலாந்து தோல்வி + "||" + Junior women's hockey: New Zealand lose to Indian team

ஜூனியர் பெண்கள் ஆக்கி: இந்திய அணியிடம் நியூசிலாந்து தோல்வி

ஜூனியர் பெண்கள் ஆக்கி: இந்திய அணியிடம் நியூசிலாந்து தோல்வி
ஜூனியர் பெண்கள் ஆக்கி போட்டியில், இந்திய அணியிடம் நியூசிலாந்து தோல்வியை தழுவியது.
கான்பெர்ரா,

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஜூனியர் பெண்கள் அணிகள் இடையிலான ஆக்கி போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் கான்பெர்ராவில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. 4-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி அந்த அணி வீராங்கனை ஆலிவியா ஷனோன் கோல் அடித்தார். பின்னர் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணி தரப்பில் ஷர்மிளா தேவி 12-வது, 43-வது நிமிடத்திலும், பியூட்டி டுங்டுங் 27-வது நிமிடத்திலும், லால்ரின்டிகி 48-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நியூசிலாந்துக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் - ஹர்பஜன்சிங் விருப்பம்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.
2. 2 வாரம் இந்திய அணி தனிமைப்படுத்திக் கொள்ள தயார்: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட செல்லும் போது அங்கு 2 வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இந்திய அணி தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
3. ஓராண்டாக விளையாடாத டோனியை இந்திய அணிக்கு எப்படி தேர்வு செய்ய முடியும்? - கவுதம் கம்பீர் கேள்வி
ஓராண்டாக விளையாடாத டோனியை எந்த அடிப்படையில் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்ய முடியும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
4. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது.
5. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ; இந்திய அணி நிதான ஆட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.