‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: ஸ்டேட் வங்கி அணி வெற்றி


‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: ஸ்டேட் வங்கி அணி வெற்றி
x
தினத்தந்தி 21 Dec 2019 11:20 PM GMT (Updated: 21 Dec 2019 11:20 PM GMT)

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டியில், ஸ்டேட் வங்கி அணி வெற்றிபெற்றது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஸ்டேட் வங்கி அணி 8-1 என்ற கோல் கணக்கில் கார்னேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி 13-0 என்ற கோல் கணக்கில் எவர்மேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பை வென்றது. இன்னொரு ஆட்டத்தில் ஆர்.வி.அகாடமி அணி 6-0 என்ற கோல் கணக்கில் அசோக் லேலண்ட் அணியை வீழ்த்தியது.

Next Story