ஹாக்கி

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: அரைஇறுதிக்கு தபால் துறை அணி தகுதி + "||" + A Division League Hockey: The postal team qualifies for the semi-final

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: அரைஇறுதிக்கு தபால் துறை அணி தகுதி

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: அரைஇறுதிக்கு தபால் துறை அணி தகுதி
‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டியின், அரைஇறுதிக்கு தபால் துறை அணி தகுதிபெற்றது.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் தபால் துறை அணி, ஆயுதப்படை போலீஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் ஒரு கட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தபால் துறை அணி பின்தங்கி இருந்த நிலையில், ஆல்பர்ட் ஜான் 48-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். ஆட்ட நேர முடிவில் சமநிலை நீடித்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தபால் துறை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.


இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் எஸ்.டி.ஏ.டி.-ரிசர்வ் வங்கி (பிற்பகல் 2 மணி), ஸ்டேட் வங்கி-தபால் துறை (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி.- ஸ்டேட் வங்கி
‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி.- ஸ்டேட் வங்கி அணிகள் மோத உள்ளன.
2. ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: அரைஇறுதியில் ரிசர்வ் வங்கி அணி
‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டியின் அரைஇறுதிக்கு ரிசர்வ் வங்கி அணி முன்னேறியது.
3. ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி: ஸ்டேட் வங்கி அணி வெற்றி
‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டியில், ஸ்டேட் வங்கி அணி வெற்றிபெற்றது.
4. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியுடன் பெடரர் வெளியேற்றம்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதியுடன் ரோஜர் பெடரர் வெளியேறினார்.
5. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் பெடரர் - ஜோகோவிச்சை வெளியேற்றினார்
டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரைஇறுதிக்கு பெடரர் தகுதிபெற்றார்.