ஹாக்கி

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி : எஸ்.டி.ஏ.டி. அணி ‘சாம்பியன்’ + "||" + 'A' Division League made: STAT Team 'champion'

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி : எஸ்.டி.ஏ.டி. அணி ‘சாம்பியன்’

‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி : எஸ்.டி.ஏ.டி. அணி ‘சாம்பியன்’
சென்னை ஆக்கி சங்கம் சார்பில் நடந்த லீக் ஆக்கி போட்டியில் எஸ்.டி.ஏ.டி. அணி சாம்பியன் வென்றது.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி.- ஸ்டேட் வங்கி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியில் கார்த்தி (31 மற்றும் 49-வது நிமிடம்), விக்னேஷ் (16-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்த தொடரில் சிறந்த கோல் கீப்பராக நித்ய சிவா (ஆர்.வி.அகாடமி), சிறந்த தற்காப்பு ஆட்டக்காரராக ஆனந்த் (செயின்ட் பால்ஸ்), சிறந்த நடுகள வீரராக சஞ்சய் (திருமால் அகாடமி), சிறந்த முன்கள வீரராக வினோத் (எஸ்.டி.ஏ.டி.) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.