ஹாக்கி

மாநில பெண்கள் ஆக்கி - இறுதிப்போட்டியில் சென்னை அணி + "||" + The State Girls hockey The final Contest Chennai team

மாநில பெண்கள் ஆக்கி - இறுதிப்போட்டியில் சென்னை அணி

மாநில பெண்கள் ஆக்கி - இறுதிப்போட்டியில் சென்னை அணி
மாவட்டங்களுக்கு இடையிலான மாநில பெண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை,

தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில பெண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் சென்னை அணி 4-1 என்ற கோல் கணக்கில் திருப்பூரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் ஈரோடு அணி 8-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை-ஈரோடு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் திருப்பூர்-திருநெல்வேலி அணிகள் சந்திக்கின்றன.