ஹாக்கி

நியூசிலாந்து தொடர்: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு + "||" + New Zealand Series: Indian women's hockey team announced

நியூசிலாந்து தொடர்: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு

நியூசிலாந்து தொடர்: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு
நியூசிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்திய பெண்கள் ஆக்கி அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மேம்பாட்டு அணியை வருகிற 25-ந் தேதியும், 2-வது மற்றும் 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை முறையே 27 மற்றும் 29-ந் தேதியும், 4-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை பிப்ரவரி 4-ந் தேதியும், 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை பிப்ரவரி 5-ந் தேதியும் சந்திக்கிறது. நியூசிலாந்து தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ராணி ராம்பால் கேப்டனாகவும், கோல் கீப்பர் சவிதா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய ஆக்கி அணி வருமாறு:-


ராணி ராம்பால் (கேப்டன்), சவிதா (துணை கேப்டன்), ரஜினி எடிமர்பு, தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், ரீனா கோக்ஹர், சலிமா, சுஷிலா சானு, நிஷா, நமிதா டாப்போ, உதிதா, மோனிகா, லிலிமா மின்ஸ், நேகா, சோனிகா, ஷர்மிளா தேவி, நவ்னீத் கவுர், லால்ரிம்சியாமி, வந்தனா கட்டாரியா, நவ்ஜோத் கவுர்.