தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி கால்இறுதிக்கு தகுதி


தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 28 Jan 2020 10:46 PM GMT (Updated: 28 Jan 2020 10:46 PM GMT)

தேசிய சீனியர் ஆக்கி போட்டியில், தமிழக அணி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.

ஜான்சி,

10-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ஏ’ டிவிசன் ஆட்டம் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 18 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி நேற்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தமிழக அணி தரப்பில் மாரீஸ்வரன் 13-வது நிமிடத்திலும், செல்வராஜ் 25-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பஞ்சாப் அணியில் ஆஷிஷ்பால் சர்மா 44-வது நிமிடத்திலும், வரிந்தர் சிங் 51-வது நிமிடத்திலும் கோல் திருப்பினார்கள்.

முந்தைய லீக் ஆட்டங்களில் சர்வீசஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரிய அணியிடம் தோல்வி கண்ட (1-3) தமிழக அணி மற்ற ஆட்டங்களில் சண்டிகாரையும் (5-2), உத்தரபிரதேசத்தையும் (1-0) வென்று இருந்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த சர்வீசஸ், 2-வது இடம் பெற்ற தமிழ்நாடு அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின.

Next Story