ஹாக்கி

புரோ லீக் ஆக்கி: இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல் + "||" + Pro League Hockey India Belgium match today

புரோ லீக் ஆக்கி: இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்

புரோ லீக் ஆக்கி: இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்
சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தயாராகும் வகையில் நடத்தப்படும் இந்த போட்டியில் தலைச்சிறந்த 9 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
புவனேசுவரம்,

தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது முதலாவது சுற்றில் நெதர்லாந்துடன் இரண்டு முறை மோதியது. முதல் ஆட்டத்தில் 5-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்த இந்தியா அடுத்த ஆட்டத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் ஆன பிறகு பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி இதுவரை 5 புள்ளிகள் பெற்று இருக்கிறது.


இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் உலக சாம்பியன் பெல்ஜியத்துடன் இன்று மல்லுகட்டுகிறது. இந்த ஆட்டம் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

பெல்ஜியம் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் கேப்டன் தாமஸ் பிரைல்ஸ் கூறுகையில், ‘இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. அவர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக இது போன்ற கடினமான அணிகளுடன் மோதும் போது தான் நாங்கள் முன்னேற்றம் காண முடியும். இதனால் இந்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார். இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதும் 2-வது ஆட்டமும் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்துள்ளது.
3. கொரோனாவை எதிர்த்து போராட இந்தியா உள்பட 64 நாடுகளுக்கு கூடுதல் நிதி- அமெரிக்கா
கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு கூடுதல் நிதியை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது.
5. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து உள்ளது அதற்காக நாங்கள் ஓய்வெடுக்க முடியாது சுகாதார துறை
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து உள்ளது அதற்காக நாங்கள் ஓய்வெடுக்கவில்லை என சுகாதார துறை கூறி உள்ளது.