கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: இந்திய பெண்கள் ஆக்கி அணியின் சீன பயணம் ரத்து


கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: இந்திய பெண்கள் ஆக்கி அணியின் சீன பயணம் ரத்து
x
தினத்தந்தி 7 Feb 2020 10:30 PM GMT (Updated: 7 Feb 2020 7:50 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய பெண்கள் ஆக்கி அணி, அடுத்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சீனாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் விளையாட திட்டமிட்டு இருந்தது.

புதுடெல்லி,

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்திய ஆக்கி அணியின் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பிரச்சினையால் இந்திய பெண்கள் அணியின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புரோ ஆக்கி லீக் போட்டியில் பல அணிகள் பங்கேற்று இருப்பதால் அந்த அணிகளுடன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யாருடன் விளையாடுவது என்பது குறித்து ஆக்கி இந்தியாவும், பயிற்சியாளர்களும் ஆலோசித்து வருகிறார்கள். நன்றாக தயாராக வேண்டும் என்றால் நல்ல அணிகளுடன் விளையாட வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார். இந்திய பெண்கள் ஆக்கி அணியின் அடுத்த கட்ட பயிற்சி முகாம் வருகிற 16-ந் தேதி முதல் மார்ச் 14-ந் தேதி வரை நடக்கிறது.

Next Story