ஹாக்கி

ஆண்டின் சிறந்த ஆக்கி வீரராக இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் தேர்வு + "||" + Best of the year As the Hockey player Indian captain Manpreet Singh selected

ஆண்டின் சிறந்த ஆக்கி வீரராக இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் தேர்வு

ஆண்டின் சிறந்த ஆக்கி வீரராக இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் தேர்வு
சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லாசானே,

தேசிய விளையாட்டு சங்கத்தினர், ஊடகத்தினர், ரசிகர்கள், வீரர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் மன்பிரீத்சிங் 35.2 சதவீத வாக்குகள் பெற்று விருது பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு போட்டியாக இருந்த ஆர்தர் வான் டோரன் (பெல்ஜியம்) 19.7 சதவீத வாக்குகளும், லுகாஸ் வில்லா (அர்ஜென்டினா) 16.5 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

இந்த விருது 1999-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கவுரவமிக்க இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பை மன்பிரீத்சிங் பெறுகிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணியை தகுதி பெற வைத்ததில் முக்கிய பங்காற்றிய 27 வயதான நடுகள வீரரான மன்பிரீத்சிங் இதுவரை 260 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கிறார். 2012 மற்றும் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கிலும் பங்கேற்றுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...