ஹாக்கி

மாவட்ட ஆக்கி போட்டி: செயின்ட் பால்ஸ் அணி ‘சாம்பியன்’ + "||" + District Hockey Tournament: St. Paul's Team Champion

மாவட்ட ஆக்கி போட்டி: செயின்ட் பால்ஸ் அணி ‘சாம்பியன்’

மாவட்ட ஆக்கி போட்டி: செயின்ட் பால்ஸ் அணி ‘சாம்பியன்’
மாவட்ட ஆக்கி போட்டியில், செயின்ட் பால்ஸ் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் செயின்ட் பால்ஸ்-கிரேட்டர் சென்னை அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செயின்ட் பால்ஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னையில் வருகிற 27-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.