16 அணிகள் பங்கேற்கும் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் - சென்னையில் நாளை தொடக்கம்


16 அணிகள் பங்கேற்கும் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் - சென்னையில் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 29 Feb 2020 10:51 PM GMT (Updated: 29 Feb 2020 10:51 PM GMT)

16 அணிகள் பங்கேற்கும் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி சென்னையில் நாளை தொடங்க உள்ளது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. போட்டியை சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் ஜி.தர்மராஜன் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி, தமிழ்நாடு போலீஸ், ஏ.ஜி.அலுவலகம், இந்திரா காந்தி கிளப், சென்னை துறைமுகம், ஸ்டேட் வங்கி அணிகளும், ‘பி’ பிரிவில் சாய், ஐ.சி.எப்., தெற்கு ரெயில்வே, வருமான வரி, ஏ.பி.எம். இன்போடெக், சென்னை மாநகர போலீஸ், இந்திய உணவு கழகம், எஸ்.டி.ஏ.டி. அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். தொடக்க நாளில் நடைபெறும் ஆட்டங்களில் சாய்-ஏ.பி.எம்.இன்போடெக் (பிற்பகல் 2 மணி), இந்தியன் வங்கி-தமிழ்நாடு போலீஸ் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

இந்த தகவலை சென்னை ஆக்கி சங்க தலைவர் வி.பாஸ்கரன் நேற்று தெரிவித்தார். அப்போது செயலாளர் எம்.எஸ்.உதயகுமார், லீக் போட்டி சேர்மன் லட்சுமி நாராயணன், டெக்னிக்கல் இயக்குனர் முகமது முனீர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story