ஹாக்கி

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஐ.சி.எப். அணி வெற்றி + "||" + Super Division Aki League: ICF The team wins

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஐ.சி.எப். அணி வெற்றி

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஐ.சி.எப். அணி வெற்றி
சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில் ஐ.சி.எப். அணி வெற்றிபெற்றது.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எப்.-இந்திய உணவு கழகம் அணிகள் மோதின. இதில் ஐ.சி.எப். அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய உணவு கழகத்தை தோற்கடித்தது. ஐ.சி.எப். அணியில் சூர்யபிரகாஷ் 2 கோலும், சுரேந்தர், சஹில் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய உணவு கழக அணியில் ஹரிகரன் ஒரு கோல் திருப்பினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஏ.ஜி.அலுவலக அணியை வீழ்த்தியது. இந்தியன் ஓவர்சீஸ் அணியில் அன்னாட் எக்கா, அமர்தீப் எக்கா, மனோஜ்குமார் தலா ஒரு கோல் அடித்தனர். ஏ.ஜி.அலுவலக அணி தரப்பில் தாமு ஒரு கோல் அடித்தார். இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜி.எஸ்.டி.-தமிழ்நாடு போலீஸ் (பிற்பகல் 2 மணி), தெற்கு ரெயில்வே-எஸ்.டி.ஏ.டி. (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.