சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் எஸ்.டி.ஏ.டி. அணியிடம் தெற்கு ரெயில்வே தோல்வி


சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் எஸ்.டி.ஏ.டி. அணியிடம் தெற்கு ரெயில்வே தோல்வி
x
தினத்தந்தி 5 March 2020 11:54 PM GMT (Updated: 5 March 2020 11:54 PM GMT)

எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி-தமிழ்நாடு போலீஸ் அணிகள் மோதின.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி-தமிழ்நாடு போலீஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி அணி 2-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை வீழ்த்தியது. ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி அணியில் ஹஸ்சன் பாஷா, சதீஷ் தலா ஒரு கோல் அடித்தனர். தமிழ்நாடு போலீஸ் அணியில் சவுந்திர பாண்டியன் ஒரு பதில் கோல் திருப்பினார். மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) அணி 2-0 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை சாய்த்தது. எஸ்.டி.ஏ.டி. அணியில் தங்க பாண்டியன், விஜயகுமார் தலா ஒரு கோல் அடித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய விளையாட்டு ஆணையம்-இந்திய உணவு கழகம் (பிற்பகல் 2 மணி), தமிழ்நாடு போலீஸ்-ஸ்டேட் வங்கி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story