ஹாக்கி

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: 12 கோல் அடித்து ஏ.ஜி. அணி அபாரம் + "||" + Super Division Aki League: 12 goals AG The team is great

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: 12 கோல் அடித்து ஏ.ஜி. அணி அபாரம்

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: 12 கோல் அடித்து ஏ.ஜி. அணி அபாரம்
சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், 12 கோல் அடித்து ஏ.ஜி. அணி அபார வெற்றிபெற்றது.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் கோல் மழை பொழிந்த ஏ.ஜி. அலுவலகம் அணி 12-0 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை வீழ்த்தியது. ஏ.ஜி. அணியில் அதிகபட்சமாக வீரதமிழன் 4 கோல்கள் அடித்தார்.


மற்ற ஆட்டங்களில் தெற்கு ரெயில்வே 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர போலீஸ் அணியையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2-0 என்ற கோல் கணக்கில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி அணியையும், எஸ்.டி.ஏ.டி. அணி 5-0 என்ற கோல் கணக்கில் இந்திய விளையாட்டு ஆணையத்தையும் வென்றது.


தொடர்புடைய செய்திகள்

1. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தமிழ்நாடு போலீஸ் அணி கோல் மழை
சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி கோல் மழை பொழிந்தது.
2. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி
சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றிபெற்றது.
3. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி கோல் மழை
சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் வங்கி அணி கோல் மழை பொழிந்தது.
4. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி
சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றிபெற்றது.
5. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி
சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் வங்கி அணி வெற்றிபெற்றது.