சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி


சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி
x
தினத்தந்தி 11 March 2020 10:58 PM GMT (Updated: 11 March 2020 10:58 PM GMT)

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றிபெற்றது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஏ.ஜி.அலுவலக அணியை வீழ்த்தியது. ஜி.எஸ்.டி. அணியில் பிரசாத் குஜூர் 2 கோலும், பாலாஜி ஒரு கோலும் அடித்தனர். ஏ.ஜி.அலுவலக அணியில் தங்கராஜ் ஒரு கோல் திருப்பினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை சாய்த்தது. இந்தியன் ஓவர்சீஸ் அணியில் ஆனந்த் எக்கா 2 கோலும், ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோலும், தமிழ்நாடு போலீஸ் அணியில் அருணாச்சலம் 2 கோலும் அடித்தனர். இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய விளையாட்டு ஆணையம்-தெற்கு ரெயில்வே (பிற்பகல் 2.30 மணி), இந்தியன் வங்கி-ஏ.ஜி.அலுவலகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story