சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: எஸ்.டி.ஏ.டி. அணியிடம் வருமான வரி தோல்வி


சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: எஸ்.டி.ஏ.டி. அணியிடம் வருமான வரி தோல்வி
x
தினத்தந்தி 14 March 2020 12:09 AM GMT (Updated: 14 March 2020 12:09 AM GMT)

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) அணி 4-3 என்ற கோல் கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தியது. எஸ்.டி.ஏ.டி. அணியில் செல்வராஜ், விஜயகுமார், சுந்தரபாண்டி, தினேஷ்குமார் தலா ஒரு கோல் அடித்தனர். வருமான அணி தரப்பில் சிங்கப்பா 2 கோலும், சஞ்சய் எக்கா ஒரு கோலும் திருப்பினார்கள். மற்றொரு ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் சுங்க இலாகா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை துறைமுக கழக அணியை வென்றது. ஜி.எஸ்.டி. அணியில் ஷிஜின், பாலாஜி, சதீஷ் தலா ஒரு கோல் அடித்தனர். சென்னை துறைமுக அணியில் யுவராஜ் ஒரு கோல் அடித்தார். இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய விளையாட்டு ஆணையம்-சென்னை மாநகர போலீஸ் (காலை 6.30 மணி), தமிழ்நாடு போலீஸ்-இந்திரா காந்தி கிளப் (காலை 8 மணி), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்-ஏ.பி.எம்.இன்போடெக் (பிற்பகல் 2.30 மணி), ஐ.சி.எப்.-தெற்கு ரெயில்வே (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story