ஹாக்கி

சூப்பர் டிவிசன் ஆக்கி: வருமான வரி அணி வெற்றி + "||" + Super Division hockeyi: Income Tax Team Success

சூப்பர் டிவிசன் ஆக்கி: வருமான வரி அணி வெற்றி

சூப்பர் டிவிசன் ஆக்கி: வருமான வரி அணி வெற்றி
சூப்பர் டிவிசன் ஆக்கி போட்டியில், வருமான வரி அணி வெற்றிபெற்றது.
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை துறைமுக கழகத்தை வீழ்த்தியது. வினோத் ராயர், அஜித்குமார், அருள் ஸ்டாலின் டேவிட் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய உணவு கழகத்தை தோற்கடித்தது. ஒரு கட்டத்தில் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த போது 55-வது நிமிடத்தில் வருமான வரி வீரர் அருண்குமார் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அடித்த கோல் வெற்றி கோலாக மாறியது. அந்த அணியில் சிவமணி, சரவணகுமார் ஆகியோரும் கோல் போட்டனர். இதே போல் ஜி.எஸ்.டி. கலால்வரி அணி தங்களை எதிர்த்து களம் கண்ட இந்தியன் வங்கி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் சாய்த்தது. ஜி.எஸ்.டி. அணியில் பிரசாத் குஜர், பெலிக்ஸ் பா, பிரபு, பிச்சுமணி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஏ.பி.எம். இன்போடெக்- சென்னை மாநகர போலீஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.