புரோ ஆக்கி லீக்: அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு


புரோ ஆக்கி லீக்: அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 24 April 2020 10:30 PM GMT (Updated: 24 April 2020 7:23 PM GMT)

புரோ ஆக்கி லீக் போட்டிகள் அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லாசானே, 

இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்பட 9 முன்னணி அணிகள் பங்கேற்றுள்ள 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. ஜூன் மாதத்தில் இந்த போட்டியை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 7-ந்தேதிக்கு பிறகு நடக்க இருந்த அனைத்து ஆட்டங்களும் தள்ளிவைக்கப்பட்டன. இதில் இந்திய அணிக்குரிய 10 லீக் ஆட்டங்களும் அடங்கும். இந்த ஆக்கி தொடர் மறுபடியும் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் மற்ற நாட்டு ஆக்கி சம்மேளனங்களின் ஒப்புதலுடன் இந்த போட்டி அடுத்த ஆண்டு (2021) ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது. 3-வது புரோ ஆக்கி லீக் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story