லாக் டவுனில் தீவிர பயிற்சி செய்யும் இந்திய ஆக்கி அணிகள்


லாக் டவுனில் தீவிர பயிற்சி செய்யும் இந்திய ஆக்கி அணிகள்
x
தினத்தந்தி 12 May 2020 11:15 AM GMT (Updated: 12 May 2020 11:15 AM GMT)

லாக் டவுனில் இந்திய ஆக்கி அணிகள் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பெங்களூரு,

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது.  இந்த ஊரடங்கின் போது இந்திய ஆண்கள் ஆக்கி வீரர்களைப் கச்சிதமாக  வைத்திருக்க அதி தீவிரம் கொண்ட பயிற்சிகள் உதவுகின்றன என்று அந்த அணியின் அறிவியல் ஆலோசகர் ராபின் ஆர்கெல் கூறியுள்ளார்.

வரும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆண்கள் ஆக்கி அணியும், பெண்கள் ஆக்கி அணியும் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. இந்த முறை ஏதாவது ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இவ்விரு அணியினரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சி முகாம்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய ஆக்கி அணிகளின் பயிற்சிக்கு பாதிப்பு இல்லை.

பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் இவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காலகட்டத்திலும் அணியின் ஆலோசகர் ஆர்கெல் தொடர்ந்து தங்கள் பக்கத்திலேயே இருந்து வீரர்களை கவனித்து வருகிறார். போட்டிகள் இல்லாத நிலையில் விளையாட்டு வீரர்களின் உடலைப் கச்சிதமாக வைத்திருக்க சுய  பயிற்சிகளை கற்றுக்கொடுத்து வருகிறார்.

Next Story