இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி


இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 12 May 2020 10:45 PM GMT (Updated: 12 May 2020 7:14 PM GMT)

இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


* இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் (வயது 96) மாரடைப்பு ஏற்பட்டு மொகாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற ஆக்கி அணியில் இடம் பிடித்தவர் ஆவார்.

* பார்முலா-1 கார்பந்தயத்தின் முன்னாள் சாம்பியனான செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) இந்த சீசனுடன் பெராரி அணியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார்.

* சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் ஜோடியாக 8,227 ரன்கள் குவித்துள்ளனர். வேறு எந்த ஜோடியும் 6 ஆயிரம் ரன்களுக்கு மேல் கூட எடுத்ததில்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புகழாரம் சூட்டி டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இதையொட்டி தெண்டுல்கர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள கங்குலி, ‘இரண்டு முனைகளிலும் புதிய பந்து பயன்படுத்தப்படும் விதிமுறை முன்பே இருந்திருந்தால் நாங்கள் இன்னும் 4 ஆயிரம் ரன்கள் கூடுதலாக எடுத்திருப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* கடந்த மார்ச் மாதத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

Next Story