இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்


இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
x
தினத்தந்தி 14 May 2020 11:52 AM GMT (Updated: 14 May 2020 11:52 AM GMT)

இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக பல்பீர் சிங்கின் பேரன் கபிர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் (வயது 96) மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 8-ம் தேதி மொகாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு நேற்று மேலும் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பல்பீர் சிங்கின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளார். அவருடைய நிலைமையை மருத்துவர்கள் கவனித்து வருகிறார்கள் என்று பல்பீர் சிங்கின் பேரன் கபிர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற ஆக்கி அணியில் இடம் பிடித்தவர் ஆவார்.

இந்திய ஆக்கி அணி 1948, 1952, 1956 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார் பல்பிர்சிங் . 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்ஸில் இவர் தலைமையில்தான் இந்திய அணி தங்கம் வென்றது. ஒலிம்பிக் ஆக்கி இறுதிப் போட்டியில் அதிக கோலடித்தவர் என்கிற சாதனை பல்பிர் சிங் வசமே உள்ளது.

 1952-ல் நெதர்லாந்து அணிக்கு எதிராக இறுதிச்சுற்றில் இந்திய அணியின் 6-1 வெற்றியில் 5 கோல்கள் அடித்து அசத்தினார் பல்பிர் சிங் . 1975 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றபோது பல்பிர் சிங்  தலைமைப் பயிற்சியாளராகவும் மேலாளராகவும் இருந்தார். 1957-ல் பத்மஸ்ரீ விருது பல்பிர்  சிங்குக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story