ஆக்கி ஜாம்பவான் பல்பிர் சிங் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக பேரன் தகவல்


ஆக்கி ஜாம்பவான் பல்பிர் சிங் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக பேரன் தகவல்
x
தினத்தந்தி 16 May 2020 11:38 AM GMT (Updated: 16 May 2020 11:38 AM GMT)

ஆக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக அவரது பேரன் கபீர் தகவல் தெரிவித்துள்ளார்.

சண்டிகர், 

இந்திய ஆக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் (வயது 96) மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 8-ம் தேதி மொகாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடந்த 12-ம் தேதி அன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு நேற்று முன் தினம் மேலும் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில்,  பல்பீர் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது பேரன் கபீர் கூறுகையில்,  எனது தாத்தா (பல்பிர் சிங்)தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், வியாழக்கிழமை முதல் அவர்  மாரடைப்புக்கு ஆளாகவில்லை. அவரது நிலை சீராக உள்ளது. அவர் இன்னும் சுயநினைவு பெறவில்லை. டாக்டர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர் என்றார்.

Next Story