ஹாக்கி

சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்க ஹாக்கி அகாடமி தொடங்க முன்னாள் கேப்டன் சர்தார் சிங் திட்டம் + "||" + Sardar Singh's post-lockdown plans: Learning golf and setting up a hockey academy

சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்க ஹாக்கி அகாடமி தொடங்க முன்னாள் கேப்டன் சர்தார் சிங் திட்டம்

சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்க ஹாக்கி அகாடமி தொடங்க முன்னாள் கேப்டன் சர்தார் சிங் திட்டம்
இந்தியாவுக்காக சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்க ஹாக்கி அகாடமி தொடங்க முன்னாள் கேப்டன் சர்தார் சிங் திட்டமிட்டு உள்ளார்.
புதுடெல்லி: 

இந்தியாவின் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் செப்டம்பர் 2018 இல் ஓய்வு பெற்றார். அரியானாவில் போலீஸ் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார்.

 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இவரது தலைமையில் தான்  தங்கப்பதக்கம் வென்றது.

கொரோனா தொற்றுநோயால் போடப்பட்டு உள்ள ஊரடங்கு முடிந்ததும், இந்தியாவுக்காக சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்க ஹாக்கி அகாடமி ஒன்றை நிறுவ ஆர்வமாக உள்ளார்.

சர்தார் தற்போது சிர்சாவில் உள்ள அவரது குடும்ப வீட்டில் உள்ளார், அங்கு அவர் பிரபலமான நம்தாரி ஹாக்கி அகாடமியில் தனது ஹாக்கி திறன்களுக்காக  கவுரவிக்கப்பட்டார்.2005 ஆம் ஆண்டில் இந்திய ஹாக்கி அணியில் அறிமுகமான பிறகு, அவர் தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட்டதில்லை.

இந்த நிலையில் சர்தார் சிங் வீடியோ  பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

"இந்த ஊரடங்கின் போது, ​​நான் எனது பெற்றோருடன் அதிக நேரம் செலவிட்டேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவம், ஏனெனில் கடந்த 15-20 ஆண்டுகளில், தேசிய அணியுடன் நிறைய பயணங்களில் கலந்து கொண்டேன்  அதனால் என்னால் அதிக நேரம் குடும்பத்துடன் செலவிட முடியவில்லை.

இந்த காலகட்டத்தில், ஒரு தனிநபராகவும் அணியுடனான எனது சாதனைகளை நினைவுகூர முடிந்தது. இது எனக்கு பெருமை சேர்க்கிறது என்று கூறினார்.

ஒரு அகாடமி அமைப்பதற்கான திட்டங்களில் சில காலமாக சர்தார் ஈடுபட்டு வருகிறார். பஞ்ச்குலாவில் எங்காவது ஒரு இடத்தை அரியானா அரசு ஒதுக்க வேண்டும் என்று கோரி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்திற்கு மேலும் 3 ரெயில்கள் இயக்க வாய்ப்பு - ரெயில்வே துறைக்கு தமிழக அரசு கடிதம்
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட பின் ரெயில்கள் இயங்க ஆரம்பித்த நிலையில் தமிழகத்திற்கு மேலும் 3 ரெயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.
2. ஊரடங்கினால் மன அழுத்தம்: டி.வி நடிகை தற்கொலை
ஊரடங்கினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, டி.வி நடிகையான பிரேக்‌ஷா மேத்தா தற்கொலை செய்து கொண்டார்.
3. ‘ஊரடங்கால் உடற்தகுதியை இழந்த இளைஞர்கள்’ - உடற்பயிற்சி நிலையங்கள் வெறிச்சோடின
ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்குவதால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் கட்டுக்கோப்பான உடல் தகுதியுடன் இருப்பதை இளைஞர்கள் இழந்து வருகின்றனர். இதனால் உடற்பயிற்சி நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
4. ஊரடங்கு 31-ந்தேதி முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
ஊரடங்கு 31-ந்தேதி முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
5. ஊரடங்கால் உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி: ஒரு லட்சம் ஓட்டல் தொழிலாளர்கள் வேலை இழப்பு
ஊரடங்கால் உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்ளே அமர்ந்து சாப்பிட அனுமதி வழஙகப்படாததால் உணவு பரிமாறும் சப்ளையர்கள் உள்பட வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஓட்டல் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்கள் வாழ்வாதாரத்துக்காக வேறு வேலையை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.