ஹாக்கி

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் பெயர் பரிந்துரை + "||" + Hockey India Nominates Women's Team Captain Rani Rampal For Khel Ratna Award

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் பெயர் பரிந்துரை

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் பெயர் பரிந்துரை
இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி

இந்திய விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரா், வீரா்களுக்கு ராஜீவ் கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2016 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது

. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரா், வீராங்கனைகள் பெயா்களை பரிந்துரைக்கின்றன.

இந்நிலையில், இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஹாக்கி இந்தியா அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ராணி ராம்பால் தலைமையில் இந்திய மகளிர் அணி, 2017-ல் ஆசியக் கோப்பைப் போட்டியை வென்றது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றது. 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெறுவதற்கு ராணி ராம்பால் முக்கியப் பங்கு வகித்தார்.

2016-ல் அர்ஜூனா விருதும் 2020-ல் பத்ம ஸ்ரீ விருதும் வென்றுள்ள ராணி ராம்பால், தற்போது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

இதுதவிர வந்தனா, மோனிகா, ஹர்மண்ப்ரீத் சிங் ஆகியோர் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்."