ஹாக்கி

ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள்- வந்தனா,மோனிகா + "||" + Indian Women's Hockey Arjuna Award Nominees Reveal To Do Well At Olympics Is Team's Only Goal

ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள்- வந்தனா,மோனிகா

ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள்- வந்தனா,மோனிகா
ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள் என அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வந்தனா,மோனிகா கூறி உள்ளனர்.
புதுடெல்லி

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வந்தனா கட்டாரியா மற்றும் மோனிகா அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள் என கூறி உள்ளனர்

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வந்தனா கட்டாரியா கூறியதாவது:

தங்கள் அணி அனுபவம் மற்றும் இளைஞர்களின் நல்ல சமநிலையைக் கொண்டுள்ளது என்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவதான் தனது இலக்கை அடைவதில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் இப்போது சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும். 

"எங்கள் அணியின் மீது நம்பிக்கை அதிகமாக உள்ளது, மேலும் பெரிய போட்டியில் நாங்கள் நல்ல திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நாங்கள் ஒரு அணியாக மிகச் சிறப்பாக உருவாகி வருகிறோம், இந்த நேரத்தில் ஒரு சிறந்த மனநிலையைக் கொண்டிருக்கிறோம் என கூறினார்.

மோனிகா கூறியதாவது:-

அணி தனது திறமைகளை கூர்மைப்படுத்துவதில் பணியாற்றி வருகிறது ஒலிம்பிக்கில் திறமையை காட்ட தயாராக இருக்கிறோம்.

"எங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளது, அது ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவதாகும். சமீப காலங்களில் எங்களது பல திறன்களை நாங்கள் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளோம், மேலும் அடுத்த அடுத்தடுத்த போட்டிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.

"எங்கள் அணியில் எங்களுக்கு நல்ல அனுபவமும் உள்ளவர்களும் இளைஞர்களும் உள்ளனர், நாங்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் நல்லவர்களாக இருக்கிறோம். எங்கள் நாட்டுக்கு நல்லது செய்ய நாங்கள் ஆர்வமாக உள்ளோம்," என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்க ஹாக்கி அகாடமி தொடங்க முன்னாள் கேப்டன் சர்தார் சிங் திட்டம்
இந்தியாவுக்காக சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்க ஹாக்கி அகாடமி தொடங்க முன்னாள் கேப்டன் சர்தார் சிங் திட்டமிட்டு உள்ளார்.
2. பல ஆண்டுகளாக ஹாக்கி வளர்ச்சியில் ஊடகங்கள் பெரும் பங்கைக் கொண்டுள்ளன-முஷ்டாக் அகமது
பல ஆண்டுகளாக ஹாக்கி வளர்ச்சியில் ஊடகங்கள் பெரும் பங்கைக் கொண்டுள்ளன: ஹாக்கி இந்திய தலைவர் முஷ்டாக் அகமது தெரிவித்து உள்ளார்.