ஹாக்கி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக பத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது-இந்திய ஒலிம்பிக் சங்க மூத்த அதிகாரி + "||" + IOC asked to take action against Batra for "illegal" election as FIH and IOA President

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக பத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது-இந்திய ஒலிம்பிக் சங்க மூத்த அதிகாரி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக பத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது-இந்திய ஒலிம்பிக் சங்க மூத்த அதிகாரி
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) தலைவராக நரேந்தர் பத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது "சட்டவிரோதமானது" என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
புதுடெல்லி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) தலைவராக நரேந்தர் பத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது "சட்டவிரோதமானது" என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் கடுமையான உள் மோதல் அதிகரித்துள்ள நிலையில், துணைத் தலைவர் சுதான்ஷு மிட்டல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) தலைவர் தாமஸ் பாக் மற்றும் ஆளும் நிர்வாக சபை பத்ராவுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொண்டனர்.

நிர்வாக சபை மற்றும் பிற ஐ.ஓ.சி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் மிட்டல்  நவம்பர் 2016 இல் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பத்ரா தொடர்ந்து ஹாக்கி இந்தியாவின் தலைவராக இருந்தார் என கூறி உள்ளார்.

ஆனால், டிசம்பர் 2017 இல் தேர்தல் நடைபெறுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர், அந்த பதவியை அவர் கைவிட்ட போதிலும், 63 வயதான அவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக நின்றபோது ஹாக்கி இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தார் என்றும் மிட்டல் குற்றம் சாட்டுகிறார்.

தனது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பிரசிடென்சி காரணமாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான பத்ரா, சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹாக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய ஊடகங்களில் வந்த தகவல்களின்படி, பாத்ரா தனது ஹாக்கி இந்தியா பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை ஜூலை 2017 இல் ஒப்புக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ 2020 க்கான இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெறுவேன் -இளம் வீரர் தில்பிரீத் சிங் நம்பிக்கை
டோக்கியோ 2020 க்கான இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெறுவேன் என இளம் வீரர் தில்பிரீத் சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
2. தேசிய அளவிலான ஹாக்கி பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மகன் தேர்வு
தமிழக அரசு சார்பில் கோவில்பட்டியில் 7 கோடி ரூபாய் மதிப்பில் ஹாக்கி சர்வதேச செயற்கை புல்வெளி பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டது.