ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கி: தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து மோதல் + "||" + Tokyo Olympic Hockey India-New Zealand clash in the opening league match

டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கி: தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து மோதல்

டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கி: தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து மோதல்
டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கியில் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து மோதுகின்றன.
லாசானே,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடக்க இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன் ஆண்கள் போட்டியில் இந்திய அணி ‘ஏ‘ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஸ்பெயின், நியூசிலாந்து, ஜப்பான் ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜூலை 24-ந் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

பெண்கள் பிரிவில் இந்திய அணி ‘ஏ‘ பிரிவில் அங்கம் வகிக்கிறது. அந்த பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஜூலை 24-ந் தேதி பலம் வாய்ந்த நெதர்லாந்துடன் மோதுகிறது.