ஹாக்கி

ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Hockey player Mandeep Singh confirmed corona infection

ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி

ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி
இந்திய ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த 25 வயதான, இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு நோய்க்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றாலும் மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மன்தீப் சிங்கிற்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இவருடன் 5 மற்ற வீரர்களுக்கும் பெங்களூருவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6வது இந்திய வீரர் மன்தீப் சிங் ஆவார். இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த மன்ப்ரீத் சிங்(கேப்டன்), சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார், கிஷன் பகதூர் பதக் ஆகிய 5 வீரர்களுக்கும் கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்டது.

இது தொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையம் கூறியுள்ளதாவது;-

“மன்தீப் சிங்கிற்கு ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. இவருடன் 20 வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு பாசிட்டிவ் என்று தெரியவந்தது, ஆனால் நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 6 வீரர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உணவகங்களில் பணிபுரியும் தடுப்பூசி போடாத தொழிலாளர்கள் 2 வாரத்துக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் சார்ஜா மாநகராட்சி அறிவிப்பு
உணவகங்களில் பணிபுரியும் தடுப்பூசி போடாத தொழிலாளர்கள் 2 வாரத்துக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் சார்ஜா மாநகராட்சி அறிவிப்பு.
2. அமீரகத்தில், ஒரேநாளில் கொரோனாவுக்கு 19 பேர் பலி
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 79 ஆயிரத்து 229 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3 ஆயிரத்து 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவுக்கு செல்ல கொரோனா பரிசோதனை கட்டாயம்: அமீரக மருத்துவ நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
இந்தியாவுக்கு செல்ல குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக இருப்பதால் அமீரக மருத்துவ நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.86 கோடியாக உயர்ந்துள்ளது.
5. புதிதாக 297 பேருக்கு தொற்று ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
புதிதாக 297 பேருக்கு தொற்று ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலி.