‘கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதும் கண்ணீர் விட்டேன்’ - ராணி ராம்பால்


‘கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதும் கண்ணீர் விட்டேன்’ - ராணி ராம்பால்
x
தினத்தந்தி 27 Aug 2020 1:32 AM GMT (Updated: 27 Aug 2020 1:32 AM GMT)

கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதும் கண்ணீர் விட்டதாக ஆக்கி வீராங்கனை ராணி ராம்பால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்த முறை தேர்வான 5 பேரில் இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பாலும் ஒருவர்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஆக்கி வீராங்கனையாக இருக்கும் எனக்கு கேல் ரத்னா வழங்கப்படும் என்று ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. விருது அறிவிக்கப்பட்டதும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

அழுதபடியே இந்த மகிழ்ச்சியான செய்தியை முதலில் எனது தந்தையிடம் தெரிவித்தேன். எனது கடின உழைப்புக்கும், தியாகத்துக்கும், விளையாட்டு மீதான அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரம் இது. தன்னலமின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்’ என்றார்.

Next Story