எது சரியோ அதனை செய்பவனே உண்மையான ஆண்; இந்திய ஹாக்கி அணி கேப்டன் பேச்சு + "||" + The real man is the one who does what is right; Indian hockey team captain's speech
எது சரியோ அதனை செய்பவனே உண்மையான ஆண்; இந்திய ஹாக்கி அணி கேப்டன் பேச்சு
பிறர் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என கவலை கொள்ளாமல் எது சரியோ அதனை செய்பவனே உண்மையான ஆண் என சர்வதேச ஆடவர் தினத்தில் இந்திய ஹாக்கி அணி கேப்டன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய ஹாக்கி அணி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் புரோ லீக் மற்றும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தயாராகி வருகிறது. இதற்காக தலைமை பயிற்சியாளர் கிரகாம் ரீட் தலைமையில் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள இந்திய விளையாட்டு கழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங், சர்வதேச ஆடவர் தினத்தினை முன்னிட்டு சிறப்பு செய்தி ஒன்றை வீடியோவாக பதிவு செய்து இன்று பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஓர் உண்மையான ஆண் என்பவன் மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்று கவலை கொள்ளமாட்டான்.
எது சரியோ அதனை செய்வான். தனது குடும்பம் மற்றும் அன்புக்குரிய நபர்களுக்கு எப்பொழுதும் நன்மையானவற்றையே செய்வான். சர்வதேச ஆடவர் தின வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மீண்டும் வரவிருக்கிற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) துணை நிற்கும் என்று சென்னையில் மத்திய மந்திரி ராம்தாஸ் அதுவாலே கூறினார்.
வாஜ்பாயின் முதல் அரசுக்கு, தமிழகத்தின் மகள் புரட்சி தலைவி அவர்கள் முழுமனதுடன் வழங்கிய ஆதரவை பா.ஜ.க.வால் மறக்க முடியாது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.