ஹாக்கி

உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஆக்கி வீரர் மரணம் + "||" + World Cup winner Indian ex Death of Hocky player

உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஆக்கி வீரர் மரணம்

உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஆக்கி வீரர் மரணம்
இந்திய ஆக்கி அணியிலும், 1975-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றவர் ஆவார்.
ரூர்கேலா, 

இந்திய ஆக்கி முன்னாள் வீரர் மைக்கேல் கோன்டா. 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆக்கி அணியிலும், 1975-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றவர் ஆவார். வெண்கலம் வென்ற அந்த ஒலிம்பிக்கில் 3 கோல்கள் அடித்திருந்தார். சிறிது காலம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மைக்கேல் கோன்டா ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.