ஹாக்கி

நிச்சயமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைப்போம் - இந்திய ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் + "||" + Rani Rampal Aiming For 'Nothing Short Of A Medal' At Tokyo Olympics

நிச்சயமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைப்போம் - இந்திய ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால்

நிச்சயமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைப்போம் - இந்திய ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால்
நிச்சயமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைப்போம் என இந்திய ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் கூறினார்.
புதுடெல்லி

இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிா் ஹாக்கி அணி, அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் 17-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 8 போட்டிகளில் அர்ஜென்டினா அணியுடன் மோதுகிறது.

இந்தத் தொடா் குறித்து இந்திய அணி கேப்டன் ராணி ராம்பால் கூறியதாவது:-

அர்ஜென்டினாவுக்கு எதிராக முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி ஆடும்பட்சத்தில் அது ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக ஆடுவதற்கான நம்பிக்கை அதிகரிக்கும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எங்கள் இலக்கு. நிச்சயமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைப்போம். நாட்டுக்கு பெருமை சோ்ப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த ஆண்டு நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் சா்வதேசப் போட்டியில் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்குகிறோம். கடந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் கடினமான காலமாக அமைந்துவிட்டது. எனினும் கடந்த ஆண்டு நாங்கள் தொடா்ந்து பயிற்சியில் ஈடுபட்டோம் என கூறினார்.