ஹாக்கி

ஜெர்மனிக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி அபார வெற்றி + "||" + Aki against Germany: Indian team wins

ஜெர்மனிக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி அபார வெற்றி

ஜெர்மனிக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி அபார வெற்றி
ஜெர்மனிக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
கிரபெல்ட், 

ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி கிரபெல்ட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதில் தொடக்கம் முதலே இந்திய அணியினர் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்து ஜெர்மணி அணிக்கு கடும் நெருக்கடி அளித்தனர். இதன் பலனாக 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீரர் நீலகண்ட ஷர்மா முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே ஜெர்மனி அணியின் முன்கள வீரர் கான்ஸ்டன்டின் பதில் கோல் திருப்பினார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

பின்னர் ஜெர்மனி அணியினர், இந்திய அணியின் கோல் எல்லையை அடிக்கடி முற்றுகையிட்டு கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர் அத்துடன் அந்த அணிக்கு பல பெனால்டி கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தது. ஆனால் இந்திய அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான ஸ்ரீஜேஷ் மற்றும் பின்கள வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு ஜெர்மனி அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டனர். இந்த நிலையில் 27-வது, 28-வது நிமிடங்களில் இந்திய அணியின் விவேக் சாகர் பிரசாத் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அணிக்கு முன்னிலையை தேடிக்கொடுத்தார்.

இந்திய அணி அசத்தல் வெற்றி

இந்திய அணியின் முன்கள வீரர்கள் லலித்குமார் உபாத்யாய் 41-வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 42-வது நிமிடத்திலும் அருமையாக கோல் வளையத்துக்குள் பந்தை திணித்தனர். பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 47-வது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோலடித்தார். இதனால் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

ஜெர்மனி அணிக்கு பெனால்டி கார்னர் உள்பட பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தாலும், அந்த அணியால் இந்திய அணியின் தடுப்பு அரணை தகர்த்து மேலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு முதல் சர்வதேச போட்டியில் ஆடிய இந்திய அணி வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்கி அசத்தி இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

இந்திய பெண்கள் அணி தோல்வி

இதேபோல் துஸ்செல்டோர்ப் நகரில் நடந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி, ஜெர்மனியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஜெர்மனி அணியில் அமெலி வோர்ட்மேன் 24-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முதலாவது ஆட்டத்தில் 0-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. மியாமி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நவோமி ஒசாகா, பியான்கா
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, கனடாவின் பியான்கா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
2. இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
3. ஆந்திர பிரதேச உள்ளாட்சி தேர்தல்; அதிக இடங்களை கைப்பற்றிய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
ஆந்திர பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெருவாரியான இடங்களை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது.
4. ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் ஆச்சி குரூப் நிறுவனங்கள் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
5. அமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி வெற்றி: பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அமேசோனியா 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் பணி வெற்றியடைந்த நிலையில் பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை