ஹாக்கி

ஜெர்மனி சுற்று பயணத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கடுமையாக போராடி தோல்வி + "||" + Indian women's hockey team loses to Germany

ஜெர்மனி சுற்று பயணத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கடுமையாக போராடி தோல்வி

ஜெர்மனி சுற்று பயணத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கடுமையாக போராடி தோல்வி
ஜெர்மனியில் நடந்து வரும் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.
டஸ்செல்டார்ப்,

ஜெர்மனி நாட்டில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சுற்று பயணம் மேற்கொண்டு ஹாக்கி போட்டிகளில் விளையாடி வருகிறது.  இதில் 4வது போட்டி டஸ்செல்டார்ப்பில் நடந்து.  போட்டியின் தொடக்கத்தில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடந்த போட்டியில் ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.  ஆனால், சவிதா தலைமையிலான பாதுகாப்பு அணியினர் அதனை தடுத்து நிறுத்தினர்.  இந்தியாவுக்கும் பின்னர் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

எனினும் அதனை கோலாக்க ஜெர்மனி வீராங்கனைகள் விடவில்லை.  போட்டியின் 2வது கால் பகுதி நிறைவடைய ஒரு நிமிடம் இருந்த நிலையில் ஜெர்மனியின் நவோமி ஹெயின் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இடைவேளைக்கு பின்பும் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது.  2வது பெனால்டி கார்னர் வாய்ப்பும் கிடைத்தது.  இந்திய அணி விடாமல் பாதுகாப்பு ஆட்டத்தில் சிறந்த முறையில் விளையாடியது.  ஆனால், தொடர்ந்து பல தாக்குதல் விளையாட்டுகளை ஜெர்மனி முன்வைத்தது.

இதனால், 37வது நிமிடத்தில், ஜெர்மனியின் சார்லட் ஸ்டேப்பன்ஹார்ஸ்ட் அடித்த 2வது கோல் அணியை 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற வழிவகுத்தது.

போட்டியின் 4வது கால் பகுதியில் ஜெர்மனியின் பாதுகாப்பு கோட்டு பகுதியில் இந்திய அணி கடுமையாக போராடியது.  இதனால், 51வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி ஒரு கோல் போட்டார்.

ஆனால், போட்டி நிறைவடையும் வரை தங்கள் அணியின் முன்னிலையில் எந்த மாற்றமும் வராதவகையில், ஜெர்மனி பாதுகாப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது.  இதனால், 4வது முறையாக தொடர்ச்சியான வெற்றியை ஜெர்மனி பதிவு செய்தது.

தொடர்புடைய செய்திகள்

1. “உளவுத்துறையின் தோல்வி இல்லை என்றால், இதன் பொருள்” - மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து ராகுல் காந்தி கேள்வி
உளவுத்துறையின் தோல்வி இல்லை என்றால், இதன் பொருள் என்ன என்று மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
2. 234 தொகுதிகளிலும் நடத்திய ‘ஆன்லைன்’ பரீட்சையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 72 பேர் தோல்வி
234 தொகுதிகளிலும் நடத்திய ‘ஆன்லைன்’ பரீட்சையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 72 பேர் தோல்வி 5-ந் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.