ஹாக்கி

புரோ ஆக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு + "||" + Pro Hockey League: Indian team announcement

புரோ ஆக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு

புரோ ஆக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு
9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடரில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது.
புதுடெல்லி, 

9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடரில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்அயர்சில் வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடக்கிறது. முன்னதாக இந்திய அணி வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் அர்ஜென்டினா அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. அத்துடன் 13, 14 ஆகிய தேதிகளிலும் அந்த அணியுடன் விளையாடுகிறது. ஜூலை 23-ந் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்த ஆட்டங்களில் இந்திய அணி களம் காணுகிறது.

புரோ ஆக்கி லீக் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட இந்திய அணியை, இந்திய ஆக்கி சங்கம் நேற்று அறிவித்தது. சமீபத்தில் நடந்த ஐரோப்பிய தொடரில் இருந்து தனிப்பட்ட காரணத்துக்காக விலகிய கேப்டன் மன்பிரீத் சிங் அணிக்கு திரும்பி இருக்கிறார். காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் அனுபவம் வாய்ந்த ரூபிந்தர் பால்சிங், வருண்குமார் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி பெங்களூருவில் இருந்து இன்று புறப்பட்டு செல்கிறது.

இந்திய ஆக்கி அணி வீரர்கள் வருமாறு:-

ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதாக், அமித் ரோஹிதாஸ், குரிந்தர் சிங், ஹர்மன்பிரீத் சிங் (துணை கேப்டன்), சுரேந்தர் குமார், ரூபிந்தர் பால்சிங், வருண்குமார், பிரேந்திர லக்ரா, ஜஸ்கரண் சிங், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங் (கேப்டன்), விவேக் சாகர் பிரசாத், ராஜ்குமார் பால், சுமித், நீலகண்ட ஷர்மா, ஷம்ஷெர் சிங், குர்ஜந்த் சிங், தில்பிரீத் சிங், மன்தீப் சிங், லலித்குமார் உபத்யாய், ஷிலானந்த் லக்ரா. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு உயர்வு; ஜார்க்கண்டில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு உயர்வால் ஜார்க்கண்டில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளன.
2. கொரோனா பாதிப்பு உயர்வு; கர்நாடகாவில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
3. கனடாவின் ஒன்டாரியோவில் 4 வார கால ஊரடங்கு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் 4 வார கால ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என அந்நாட்டு மாகாண தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
4. சென்னை-கோவை, மதுரை-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை-கோவை, மதுரை-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில் இடையே முன்பதிவு சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
5. தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.