இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஆக்கி தொடர் பாகிஸ்தான் சம்மேளன நிர்வாகி வேண்டுகோள் + "||" + Request by the Administrator of the Pakistan Association for the Re-Agi Series between India and Pakistan
இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஆக்கி தொடர் பாகிஸ்தான் சம்மேளன நிர்வாகி வேண்டுகோள்
இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ஆக்கி தொடர் பாகிஸ்தான் சம்மேளன நிர்வாகி வேண்டுகோள்.
கராச்சி,
சர்வதேச ஆக்கி சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கி சம்மேளன நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கி சம்மேளன நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘டெல்லியில் நடைபெறும் சர்வதேச ஆக்கி சம்மேளன கூட்டத்தில் நாங்கள் பங்கேற்பதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே மீண்டும் ஆக்கி தொடர் நடத்துவது குறித்து இந்திய ஆக்கி சம்மேளன நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். இரு நாடுகள் இடையிலான தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு கூட நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடர் நடந்தால் இரு நாட்டு சம்மேளனங்களுக்கும் நல்ல வருவாய் கிடைப்பதுடன், ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
மிரட்டலுக்கு அஞ்சாத இயக்கம் தி.மு.க., நான் நெருக்கடிகளை எதிர்கொள்கிறேன், நீங்கள் வெற்றியை பெற்று தாருங்கள் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி.மு.க.வினர் பிரசாரம் செய்யும்போது மரபையும், மாண்பையும் மனதில் வைத்து செயல்படுமாறு கேட்டு கொள்கிறேன் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.