ஹாக்கி

புரோ ஆக்கி லீக்: அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளிக்குமா இந்தியா? + "||" + Pro Hockey League: Will India shock Argentina?

புரோ ஆக்கி லீக்: அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளிக்குமா இந்தியா?

புரோ ஆக்கி லீக்: அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளிக்குமா இந்தியா?
புரோ ஆக்கி லீக் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளிக்குமா இந்தியா? என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பியூனஸ்அயர்ஸ், 

கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இதன் அடுத்த 2 லீக் ஆட்டங்களில் இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்கள் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்அயர்சில் முறையே இன்றும், நாளையும் நடக்கிறது. சில தினங்களுக்கு முன்பு நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் 4-4 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. ஓராண்டு இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டியில் களம் காணும் இந்திய அணி முந்தைய பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்று நம்பலாம்.