ஹாக்கி

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் பல்பிர் சிங் ஜூனியர் காலமானார் + "||" + Former Indian hockey player Balbir Singh Junior dead

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் பல்பிர் சிங் ஜூனியர் காலமானார்

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் பல்பிர் சிங் ஜூனியர் காலமானார்
இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் பல்பிர் சிங் ஜூனியர் நேற்று காலமானார்.
சண்டிகர்,

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரரான பல்பிர் சிங் ஜூனியர் சண்டிகாரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 

இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. 88 வயதான பல்பிர் சிங் ஜூனியருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 1958-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த பல்பிர் சிங்கின் மறைவுக்கு ஆக்கி இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.

முன்னதாக பஞ்சாப் பல்கலை., அணியை வழிநடத்திய பல்பிர் சிங் ஜூனியர், உள்ளூர் போட்டியில் பஞ்சாப், ரயில்வே, சர்வீசஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார். கடந்த 1962ல் இந்திய ராணுவத்தில் இணைந்த இவர், 1984ல் ஓய்வு பெற்றார். அதன்பின் சண்டிகரில் வசித்து வந்த இவர், கோல்ப் போட்டியில் விளையாட ஆர்வம் காட்டி வந்தார்.