ஹாக்கி

முன்னாள் சர்வதேச ஹாக்கி பெண் நடுவர் கொரோனா தொற்றால் மறைவு + "||" + Former international hockey referee dies of corona infection

முன்னாள் சர்வதேச ஹாக்கி பெண் நடுவர் கொரோனா தொற்றால் மறைவு

முன்னாள் சர்வதேச ஹாக்கி பெண் நடுவர் கொரோனா தொற்றால் மறைவு
கொரோனா தொற்றால் மறைந்த முன்னாள் சர்வதேச ஹாக்கி பெண் நடுவருக்கு ஹாக்கி இந்தியா இரங்கல் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளில் விளையாடிய வீராங்கனை அனுபமா பஞ்சிமண்டா (வயது 40).  கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை பெங்களூருவில் அவர் உயிரிழந்து விட்டார்.  அவருக்கு ஹாக்கி இந்தியா இரங்கல் தெரிவித்து உள்ளது.  இதுபற்றி அதன் தலைவர் ஞானேந்திரோ நிங்கொம்பம் வெளியிட்டுள்ள செய்தியில், பெங்களூரு நகரில் இன்று காலை அனுபமா மறைந்து விட்டார் என்ற மிக சோக செய்தி வந்தடைந்தது.

சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றிய மதிப்பிற்குரிய வெகு சில பெண்களில் அவரும் ஒருவர்.  அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் சோகத்தில் ஹாக்கி இந்தியா பங்கு கொள்கிறது.  அனுபமாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 640-பேர் உயிரிழந்துள்ளனர்.
3. கொரோனாவுக்கு பெண் பலி
கொரோனாவுக்கு பெண் உயிரிழந்தார்.
4. கொரோனாவுக்கு 2 பேர் பலி
கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
5. புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று