இந்திய மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் உள்பட 7 வீராங்கனைகளுக்கு கொரோனா


இந்திய மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் உள்பட 7 வீராங்கனைகளுக்கு  கொரோனா
x
தினத்தந்தி 27 April 2021 7:54 AM GMT (Updated: 27 April 2021 7:54 AM GMT)

இந்திய மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் உள்ளிட்ட ஏழு ஹாக்கி வீராங்கனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு

பெங்களூர் உள்ள சாய் அமைப்பில் பயிற்சி பெறுவதற்காக  இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பெங்களூருக்கு வந்துள்ளனர். சாய் அமைப்பின் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஏப்ரல் 24 அன்று அனைத்து வீராங்கனைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் உள்ளிட்ட ஏழு வீராங்கனைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

 இதுகுறித்து சாய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ராணி ராம்பால், சவிதா புனியா, ஷர்மிலா தேவி, ரஜனி, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர், சுஷிலா ஆகிய ஏழு வீராங்கனைகளுக்கும், வீடியோ அனலிஸ்ட் மற்றும் ஆலோசகருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அனைவருக்கும் அறிகுறிகள் இல்லை. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story