ஹாக்கி

3-வது புரோ ஆக்கி லீக்: தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்திக்கிறது, இந்தியா + "||" + 3rd Pro Hockey League: Meets New Zealand in the opening match, India

3-வது புரோ ஆக்கி லீக்: தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்திக்கிறது, இந்தியா

3-வது புரோ ஆக்கி லீக்: தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்திக்கிறது, இந்தியா
3-வது புரோ ஆக்கி லீக் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
பெங்களூரு, 

அடுத்த ஆண்டு நடக்கும் 3-வது புரோ ஆக்கி லீக் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. அதே மாதத்தில் முன்னாள் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா (பிப்.12, 13), ஸ்பெயின் (பிப்.26, 27) அணிகளுடனும் இந்தியா மோதுகிறது. தொடர்ந்து 5 வெளிநாட்டு ஆட்டங்களில் விளையாடிய பிறகு உள்ளூரில் ஜெர்மனி (மார்ச்.12, 13) மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை (மார்ச்.19, 20) எதிர்கொள்ளும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. இங்கிலாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து அணிகளையும் இந்தியா சந்திக்க இருக்கிறது.

இந்த சீசனில் 2-வது புரோ ஆக்கி லீக் போட்டியே இன்னும் முடியவில்லை. கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடரில் இந்திய அணி அடுத்து ஸ்பெயின், ஜெர்மனி அணிகளை இந்த மாதத்தில் எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.