புரோ ஆக்கி லீக்: இந்திய அணியின் ஆட்டங்கள் தள்ளிவைப்பு


புரோ ஆக்கி லீக்: இந்திய அணியின் ஆட்டங்கள் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 4 May 2021 10:31 PM GMT (Updated: 2021-05-05T04:01:42+05:30)

9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி லீக் தொடரில் இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகளை முறையே வருகிற 15, 16 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள இருந்தது.

கொரோனா 2-வது அலை காரணமாக ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பிய கண்டத்துக்கு செல்வதற்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் இந்திய அணியின் அடுத்த 4 லீக் ஆட்டங்களும் தள்ளிவைக்கப்படுவதாக சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்த போட்டியை மீண்டும் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோ ஆக்கி லீக் தொடரில் இதுவரை நடந்த ஆட்டங்கள் முடிவில் பெல்ஜியம் அணி 32 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி (19 புள்ளி) 2-வது இடத்திலும், நெதர்லாந்து (18 புள்ளி) 3-வது இடத்திலும், இந்தியா (15 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளன.


Next Story